சமூகத்தில் நிலவும் வன்முறைக்கு சினிமா காரணமா: சுரேஷ் கோபி சொல்வது இதுதான்!

2

திருவனந்தபுரம்: "சமூகத்தில் நிகழும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம், ஆனால் அதுவே அதற்கு மூல காரணம் என கூற முடியாது"என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறினார்.

திருவனந்தபுரத்தில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி கூறியதாவது:

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் மக்கள் அதைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் புரிந்துகொள்ளவும் வேண்டும்.

திரைப்படங்களில் வன்முறையைக் காட்டக்கூடாது அல்லது அதைக் குறைக்க வேண்டும் என்று கூறுவதை விட, அதில் காட்டப்படுவது எதுவும் சமூகத்துக்கு நல்லதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வன்முறையை சமாளிக்க பல்துறை அணுகுமுறை தேவை. சினிமாவை குற்றம் சாட்டுவதை விட சமூக, பொருளாதார மற்றும் உளவியல் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சுரேஷ் கோபி கூறினார்.

Advertisement