டிரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறார் ஜேம்ஸ் கேமரூன்

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் முகத்தை நாள்தோறும் பார்க்கவிரும்பவில்லை, அமெரிக்காவை விட்டு வெளியேறி நியூசிலாந்தில் நிரந்தரமாக குடியேற போவதாக பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் டைடானிக், அவதார், டெர்மினேட்டர் என சில வெற்றிப் படங்களை இயக்கி பல ஆஸ்கர் விருதுகளை பெற்றவர் என சாதனை படைத்தவர். கனடாவில் பிறந்த இவர், 17 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது கொடூரமானது. டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா ஒழுக்கமான அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகுவதாகநான பார்க்கிறேன். அமெரிக்கா எதனுடன் இணைந்திருக்கவில்லை என்றால், அது வரலாற்று ரீதியாக நிற்க முடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும்.
தினந்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் முதல் பக்கத்தை முழுமையாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது.நியூசிலாந்து நாளிதழ்களில் சற்று வேறுமாதிரியாக உள்ளது. அங்கு அவர்கள் 3வது பக்கத்திலாவது போடுகிறார்கள்.
டிரம்ப்பின் முகத்தை தினமும் நாளிதழின் முதல் பக்கத்தில் பார்க்க விரும்பவில்லை. இது மீண்டும் மீண்டும் கார் விபத்தை பார்ப்பது போல் உள்ளது.நியூசிலாந்து நாட்டில் உடனடியாக குடியேற கேட்டு இருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடியெபர்ந்து விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.






மேலும்
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதலால் உக்ரைன் எதிர்காலம்... கேள்விக்குறி! ஐரோப்பா ஆதரவு போதுமா?
-
மனைவி மிரட்டலால் கணவர் மீது 'போக்சோ'; போலீசுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை
-
2 எம்.பி., 4 எம்.எல்.ஏ., இருந்தும் வி.சி., கொடியை ஏற்ற முடியவில்லை
-
'ஹாட்ரிக்' வெற்றிக்கு இந்தியா 'ரெடி' * இன்று நியூசி.,யுடன் பலப்பரீட்சை
-
அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா: துசென், கிளாசன் விளாசல்
-
சிக்கலான சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை