ஜெலன்ஸ்கியின் பொய்களில் மிகப்பெரிய பொய் அதுதான்: ரஷ்யா

11

மாஸ்கோ: ''கடந்த 2022 ல் உக்ரைன் எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் கூறியது தான் அவர் சொன்ன பொய்களில் மிகப்பெரிய பொய், '' ரஷ்யா கூறியுள்ளது.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.


இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியதாவது: வாக்குவாதத்தின் போது, ஜெலன்ஸ்கியை தாக்காமல் டிரம்ப் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்.


2022 ல் உக்ரைன் எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தது என வெள்ளை மாளிகையில் அவர் கூறியது தான் ஜெலன்ஸ்கி கூறிய பொய்களில் மிகப்பெரிய பொய்.
ஜெலன்ஸ்கியை அடிக்காமல் அதிபர் டிரம்ப்பும், துணை அதிபர் வான்சும் எப்படி கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள் என்பது அதிசயம். தனக்கு ஆதரவு அளித்த கைகளையே ஜெலன்ஸ்கி பதம் பார்த்து விட்டார்.


யாராலும் விரும்பப்படாதவராக ஜெலன்ஸ்கி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement