பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்

புதுடில்லி: கடந்த பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி.,வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1.68 லட்சம் கோடி வசூல் ஆகியிருந்தது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:
பிப்ரவரி மாதம்
மத்திய ஜிஎஸ்டி 35,204 கோடி ரூபாயாகவும்
மாநில ஜிஎஸ்டி 43,704 கோடி ரூபாயாகவும்
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 90,870 கோடி ரூபாயாகவும்
கூடுதல் வரி 13,868 கோடி ரூபாயாகவும் வசூலாகி உள்ளன.
மொத்தம், ரூ.1.84 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்ததால், பிப்., மாத ஜி.எஸ்.டி.,வசூல் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு பிப்., மாதம் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.
வாசகர் கருத்து (2)
SUBBU,MADURAI - ,
01 மார்,2025 - 20:12 Report Abuse

0
0
Reply
SUBBU,MADURAI - ,
01 மார்,2025 - 20:11 Report Abuse

0
0
Reply
மேலும்
-
முதல்வர் இரும்புக்கரத்தை இப்போதாவது செயல்படுத்த வேண்டும்: இ.பி.எஸ்., கண்டனம்
-
திமுகவின் நிழலில் இருப்பதால் பயமின்றி உலாவும் குற்றவாளிகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு
-
டிரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறார் ஜேம்ஸ் கேமரூன்
-
போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு
-
ஜெலன்ஸ்கியின் பொய்களில் மிகப்பெரிய பொய் அதுதான்: ரஷ்யா
Advertisement
Advertisement