சுற்றித்திரியும் கால்நடைகள் சாலையில் விபத்து அபாயம்



சுற்றித்திரியும் கால்நடைகள் சாலையில் விபத்து அபாயம்


அரூர்:தர்மபுரி மாவட்டம் அரூரில், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், திரு.வி.க.,நகர், கச்சேரிமேடு உட்பட, பல்வேறு இடங்களிலுள்ள சாலைகளில், மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதுடன், சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் திரியும் கால்நடைகளை கடந்து செல்லும்போது, பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. மேலும், கால்நடைகள், உணவு பொருட்களுடன் வீசப்படும் பாலித்தீன் பைகளையும் தின்று, பாதிப்புக்கு ஆளாகின்றன. எனவே, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதிக்க, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement