டூவீலர் மீது வேன் மோதிய  விபத்தில் நால்வர் காயம்

தேனி: வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை காமாட்சியம்மன் கோயில் தெரு கார்த்திகேயன் 32.இவரது மனைவி ஆனந்தஜோதி 24. இவர்களின் மூன்று வயது மகள் மஞ்சனாஸ்ரீ, ஒன்றரைவயது மகன் ரிதுன்சக்தி உள்ளனர்.

குழந்தைகளுக்கு காதுகுத்து நிகழ்ச்சிக்கு பத்திரிகைவைப்பதற்காக போடிக்கு குடும்பத்துடன் டூவீலரில் சென்றனர்.

மீண்டும் உப்புக்கோட்டைநோக்கி வந்தனர் அப்போது லட்சுமிநாயக்கன்பட்டி சேர்ந்த ரவிக்குமார்ஓட்டிவந்த பிக்கப்வேன் டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் டூவீலரில் சென்றகார்த்திகேயன், மனைவி, மகன், மகளுக்கு காயங்கள்ஏற்பட்டன.

மூவரும் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனைவி தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கார்த்திகேயனுக்கு கையில்சிராய்ப்பு ஏற்பட்டது. பிக்கப் வேன் டிரைவர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார்வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement