சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டி; ஆஸி., -219 /6

1

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரை இறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அந்த அணி 42 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து உள்ளது. ஆஸி., அணியின் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. இந்திய அணி வரிசையாக வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் (6 புள்ளி) பிடித்தது.



நுாறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங் பலமாக உள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 04) அரையிறுதி போட்டி நடக்கிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.


டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. இதனால் இந்திய அணி பவுலிங் செய்கிறது.3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியா அணி இறங்குகிறது. 4 சுழற்பந்து வீரர்களுடன் இந்தியா களம் இறங்குகிறது.


சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 14வது முறையாக டாஸை இழந்தார் ரோகித் சர்மா. ஏற்கனவே அதிக முறை டாஸை இழந்த கேப்டன் பட்டியலில் முதல் இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார்.

Advertisement