சென்னை ஐகோர்ட்டிற்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த ராமசாமி, தனபால், சின்னசாமி மற்றும் கந்தசாமி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் இந்த நான்கு பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். தற்போது சென்னை ஐகோர்ட்டில் 65 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement