பெரியகுளம் தொகுதியில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

பெரியகுளம்: பெரியகுளம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, பொதுநிதி பணிகள் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா நடந்தது.

சரவணக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தங்கதமிழ்செல்வன் எம்.பி., முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் சருத்துப்பட்டியில் ரூ.12.30 லட்சம் மதிப்பீடு ரேஷன் கடை, கெங்குவார்பட்டி பேரூராட்சி வார்டு 2,13, செங்குளத்துப்பட்டி ரேஷன் கடை உட்பட 3 கடைகள் தலா ரூ.13.16 லட்சம் மதீப்பீடு, தெய்வேந்திரபுரத்தில் ரூ.9.08லட்சம் மதீப்பீட்டில் ரேஷன் கடைக்கான கட்டடம் திறக்கப்பட்டது.

தென்கரை பேரூராட்சி ரூ.1 கோடியில் அலுவலகம் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜையும், இப் பேரூராட்சி காளியம்மன் கோயில் தெருவில் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. கூடுதல் கட்டட பூமி பூஜை, எருமலைநாயக்கன்பட்டி, முதலக்கம்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர்

முகமது இலியாஸ், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். பெரியகுளம் நகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது. தூய்மை பணியாளர்களுக்கு சீருடை ,நலத்திட்ட உதவிகளை நகராட்சி தலைவர் சுமிதா, கமிஷனர் தமிஹா சுல்தானா வழங்கினர்.-

Advertisement