சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் 'குருவி'கள் கைது

10

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலை அருகே போலீசார் நடத்திய சோதனையில், கடத்தி செல்லப்பட்ட 28 கிலோ தங்கம் சிக்கியது. காரில் கடத்தி சென்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



சென்னை மெரினா காமராஜர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கடத்தி சென்ற 28 கிலோ தங்கத்தை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


போலீசார் விசாரணையில் பிரகாஷ், கிரண், அனில், பால் என தெரியவந்தது. இவர்கள் 28 கிலோ தங்க நகைகளை வியாபாரத்திற்காக சவுகார்ப்பேட்டைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நகைகளை வணிக வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் பின்னணி குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement