குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வாருங்கள்; பிரதமர் மோடி அழைப்பு

டேராடூன்: குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்தால் உண்மையான சூழலை அனுபவிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். உத்தரகண்ட் மாநிலத்தை மிகவும் சிறந்த சுற்றுலா இடமாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லைப் பகுதிகள் சுற்றுலாவின் பலன்களைப் மக்கள் பெற விரும்புகிறோம். உத்தரகண்ட் அரசின் தொலைநோக்குப் பார்வை மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்தால் உண்மையான சூழலை அனுபவிக்க முடியும். உத்தரகண்ட் மாநிலத்தில் குளிர்காலம் இல்லாத நேரத்தில் கூட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுற்றுலாத்துறை பன்முகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வழிபாடு
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவர் கோவிலில் கூடியிருந்த மக்களை பார்த்து கை அசைத்தார். முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
வாசகர் கருத்து (1)
sethu - Chennai,இந்தியா
06 மார்,2025 - 13:46 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை : 4 பேருக்கு ஆயுள் : திருநெல்வேலி கோர்ட் தீர்ப்பு
-
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்
-
பாலிவுட்டை விட்டு வெளியேறினார் டைரக்டர் அனுராக் காஷ்யப்!
-
மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரி: வாசன் எதிர்ப்பு
-
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
-
ரவுடி படப்பை குணா கைது
Advertisement
Advertisement