ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்

புதுடில்லி: ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குப்பைகளை வீசும் ரயில்வே ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில் அந்த மூத்த ரயில்வே ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சமூக வலைதளத்தில் வைரல் ஆன வீடியோ ஒன்றில், ரயில்வே ஊழியர் ஒருவர் குப்பையை தண்டவாளத்தில் வீசும் காட்சி பதிவாகியுள்ளது
அப்போது அருகில் இருந்த மற்றொரு நபர் குறுக்கிட முயன்றார். இதைச் செய்யாதே என்று கூறினார். இருப்பினும், ரயில்வே ஊழியர், பதட்டமடையாமல், புன்னகையுடன்,குப்பையை எங்கே போட வேண்டும்? என்று பதிலளித்தார்.
இது குறித்து ரயில்வே சேவா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்திய ரயில்வே ஊழியரின் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட ரயில்வே மூத்த ஊழியர் நீக்கப்பட்டார். இந்திய ரயில்வேயில் நன்கு நிறுவப்பட்ட குப்பை அகற்றும் வழிமுறை இருக்கிறது. விதிகள் மீறலுக்குப் பொறுப்பான ஆன்-போர்டு ஹவுஸ்கீப்பிங் சர்வீசஸ் (ஓ.பி.எச்.எஸ்) ஊழியர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரயில்வே சேவா பதிவிட்டுள்ளது.
மேலும்
-
பாக்., ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு: பயங்கரவாதி உ.பி.,யில் கைது
-
பெண்கள் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி: இ.பி.எஸ் கண்டனம்
-
தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி: மக்காச்சோளம் மீதான செஸ் வரி வாபஸ்
-
மகளை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
-
நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு
-
நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து