ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி

ராஞ்சி: பல வார கால தாமதத்திற்குப் பிறகு, ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பாபுலால் மராண்டி பொறுப்பேற்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., தலைவரான மராண்டி, இன்று ராஞ்சியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் கட்சியின் உயர் தலைமையால் நியமிக்கப்பட்ட மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பா.ஜ., எம்.எல்.ஏக்கள் மராண்டி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் அவர் சட்டமன்றத்தில் முறையாகப் பொறுப்பேற்க வழி வகுத்தனர்.
தேர்வு செயல்முறையை மேற்பார்வையிட, மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் கே.லட்சுமணன் ஆகியோரை தேசிய தலைமை மத்திய பார்வையாளர்களாக நியமித்தது.

Advertisement