வைக்கோல் வாங்க குவியும் வெளிமாவட்ட வியாபாரிகள்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் பகுதிக்கு, வைக்கோல் வாங்குவதற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் குவிந்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் பின்பட்ட சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட்ட வயல்களில், கடந்த சில வாரங்களாக அறுவடை நடந்து வருகிறது. அறுவடை முடிந்து வைக்கோல்களை பேலர் மெஷின் மூலம் உருட்டி, வயல்களில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வெளி மாவட்ட வியாபாரிகள் லாரி, பிக்கப் உள்ளிட்ட வாகனங்களில் வந்து ஒரு வைக்கோல் கட்டு 90 ரூபாய்க்கு, விலை பேசி வாங்கி செல்கின்றனர்.
தற்போது வெளி மாவட்ட வியாபாரிகள் புதுச்சத்திரம் பகுதியில் வைக்கோல் வாங்க குவிந்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
மிட்செல் - பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் வருண்; அடுத்தடுத்து சுழலில் சிக்கும் நியூசி.,
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
-
இந்திய அணி அபார பந்துவீச்சு
-
10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை; காங். எம்.பி.,க்கு அண்ணாமலை பதில்
Advertisement
Advertisement