தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்

6


மும்பை: மும்பையில், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த நான்கு பேர், விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

மும்பையின் நக்படா பகுதியில் உள்ள ஓட்டுநர் பயிற்சிபள்ளி அருகே புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12:29 மணியளவில் அங்குள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களை விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில், ஹசிபல் ஷேக்(19), ராஜா ஷேக்(20), ஜியாவுல்லா ஷேக்(36) மற்றும் இமாந்து ஷேக்(38) ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement