அரசு உதவி தொகை குறித்த விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து உதவித்தொகைகள் குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பல்கலைக்கழக மைய நூலக அரங்கில் நடந்த முகாமில், சமவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டு குழு புல முதல்வர் கோதைநாயகி, சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை சரவணன் வாழ்த்துரை வழங்கினர்.

துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வி துவக்கி வைத்தார். பல்கலைகழக பதிவாளர்(பொறுப்பு) பிரகாஷ் சிறப்புரையற்றினார்.

அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உதவி தொகை பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தொலைதூர கல்வி இயக்குனர் சீனிவாசன், புல முதல்வர் விஜயராணி, கார்த்திகேயன், குலசேகரபெருமாள்பிள்ளை, ஸ்ரீராம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

வணிகவியல் துறை ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜ் நன்றி கூறினார்.

Advertisement