பஸ் பாஸ் புதுப்பித்தல் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
கடலுார் : மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம் வரும் 15ம் தேதி கடலுாரில் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பஸ் பாஸ் அட்டை புதுப்பிக்கும் முகாம், வரும் 15ம் தேதி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் அட்டை பெற்றுள்ளவர்கள், முகாமில் பங்கேற்று, அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம் 4, ஆதார் அட்டை நகல் மற்றும் பழைய இலவச பஸ் பயண அட்டை ஆகியவற்றுடன் வந்து பயன்பெறலாம்.
மேலும்
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
மிட்செல் - பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் வருண்; அடுத்தடுத்து சுழலில் சிக்கும் நியூசி.,
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
-
இந்திய அணி அபார பந்துவீச்சு
-
10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை; காங். எம்.பி.,க்கு அண்ணாமலை பதில்