சேலியமேடு பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில், புதுவை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில், இரண்டு நாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடந்தது.
சாரண ஆசிரியர்கள் ஜோதி, முத்து பாபு, ஐயப்பன், லதா, நுண்கலை ஆசிரியர் ரவி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முதல் நாள் முகாமில், சாரண சாரணியர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். இரண்டாம் நாள் பயிற்சியில் சாரணர் சட்டம், ஊதல் சைகைகள், கை சைகைகள், சீருடை அணியும் முறை, விளையாட்டு, கைகுலுக்கும் முறை, அணிமுறை பயிற்சி, முதலுதவி, முடிச்சுகள் கட்டுதல், கைவினை பயிற்சி, உடற்பயிற்சி, பாடல்கள் மற்றும் சர்வ சமய வழிபாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் தலைமை ஆசிரியர் பழனிசாமி, மாநில அமைப்பு ஆணையர் சண்முகம்,மாநில இணைச் செயலாளர் ராமலிங்கம், மாநிலபயிற்சி ஆணையர் தணிகைகுமரன்,சாரணா ஆசிரியர் மதிவாணன், ஆசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி ஆகியோர் சிறந்த சாரண சாரணியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
மேலும்
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
கபடி விளையாட்டில் மோதல்; பள்ளி மாணவரை சரமாரியாக வெட்டிய கும்பல்; ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி!
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
-
ரூ.800 கோடி முதலீட்டில் ஹையர் 'ஏசி' உற்பத்தி ஆலை