இந்திய கம்யூ., கூட்டம்

பாகூர்: இந்திய கம்யூ., பாகூர் தொகுதி குழு கூட்டம், கருணா ஜோதி இல்லத்தில் நடந்தது.

மாநில செயலாளர் சலீம், மூத்த நிர்வாகி ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி,தொகுதி செயளாலர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் விஜயபாலன், நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், பின்னாச்சிக்குப்பம் பைபாஸ் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். பாகூர் பகுதியில் விஷக்காய்ச்சல் பரவலை உடனடியாக தடுக்க வேண்டும்.பாகூர் பகுதியில் தானே புயலின் போது சேதமடைந்த மின் பாதையை சரி செய்திட வேன்டும். பொதுப்பணிதுறை பாசன மற்றும் வடிகால் வாய்கால்களை மறு அளவீடு செய்து துார்வாரிட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement