இ.வி.எம்., குடோன் அமைக்கும் பணி

புதுச்சேரி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு நான்கு மாடி கட்டடம் மற்றும் இ.வி.எம்., குடோன் வளாகம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நிதி மூலம், அத்துறைக்கு 4 மாடி கட்டட அலுவலகம் மற்றும் இ.வி.எம்., குடோன் வளாகம் 7 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.

வளர்ச்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை செயலர் ஆஷிஷ் மாதவராவ் மோரே, பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன்,பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், சிறப்பு கட்டட கோட்ட செயற்பொறியாளர் வாசு, என்.ஆர்.காங்., பிரமுகர் கோபி, ஒப்பந்ததாரர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement