இ.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன், இ.கம்யூ., சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, மாநில துணை செயலாளர் வீரபாண்டி கோரிக்கை குறித்து பேசினர். போராட்டத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் பல காலமாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வன விலங்கு சரணாலயம் என்ற பெயரில், வனத்தை ஒட்டிய நிலங்களில், எவ்வித வளர்ச்சி பணிகளையும் செய்யக்கூடாது என, கோஷம் எழுப்பினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத்திடம், 10,000க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன. 5,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் திரண்டதால் காலை, 11:00 முதல், மதியம், 2:00 மணி வரை, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால், அஞ்செட்டி மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முன்புள்ள சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
மேலும்
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்