சாலை வரை கடைகள் விஸ்தரிப்பு கடிவாளம் போடுவது யார்
பொள்ளாச்சி : அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து விஸ்தரிக்கப்படும் கடைகளால், வால்பாறை ரோட்டில் நெரிசல் அதிகரிக்கிறது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து காணப்பட்டது. தனிநபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
குறிப்பாக, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோடு என, முக்கிய வழித்தடங்களில், சாலையோர ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. ஆனால், பல இடங்களில், 'ஆக்கிரமிப்பு செய்யாதீர்' என, அறிவுறுத்தப்பட்ட கடைக்காரர்களே மீண்டும் அத்துமீறலை துவக்கியுள்ளனர்.
அதில், சுற்றுலாத்தலமான ஆழியாறு, வால்பாறை செல்லும் ரோட்டில், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பல கடைக்காரர்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை வரை, ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அருகே உள்ள கடைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு கடைகளை விஸ்தரிப்பு செய்தும் வருகின்றனர்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்திக்கொள்வதால், போக்குவரத்து பாதிக்கிறது. சூளேஸ்வரன்பட்டி, வஞ்சியாபுரம் பிரிவு, சமத்துார் என, பல கி.மீ., துாரத்திற்கு ஆக்கிரமிப்பு நீள்கிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
கடைக்காரர்கள், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். மக்களுக்கு ஏற்படும் இடையூறும், போக்குவரத்து பாதிப்பு குறித்தும் சிந்திப்பதே கிடையாது. இதனால், சாலையை ஆக்கிரமித்து தற்காலிக ெஷட், சிமென்ட் தளம் அமைத்து, நிரந்தரமாக கடைகளை விஸ்தரிப்பு செய்கின்றனர்.
ஏற்கனவே, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் தள்ளுவண்டிக் கடைகள் வைத்துள்ளனர். தற்காலிக ெஷட் அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் இனி ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், மீண்டும் கடைகளை அமைத்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு