ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு

மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த சக்திகாந்ததாஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார். அவர் சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த நோட்டு வடிவமைப்பு மஹாத்மா காந்தி வரிசையில் உள்ள ரூ.100, ரூ.200 நோட்டுகளை போலவே இருக்கும் எனவும், கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் செல்லுபடியாகும் எனவும் கூறியுள்ளது.

Advertisement