ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் வேகம்; டெண்டர் வெளியிட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்

1

சென்னை; தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்காக டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.



மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத்துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய 2023ம் ஆண்டு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டது.


இதில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை ஏ.இ.எஸ்.எல்., நிறுவனம் எடுத்தது. இந்த ஒப்பந்தப்புள்ளி அண்மையில் ரத்து செய்யப்பட்டது. மற்ற 3 தொகுப்புகளுக்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.


இந் நிலையில், தற்போது 2வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. 6 கட்டங்களாக மீட்டர் நிறுவ இம்முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Advertisement