பாகிஸ்தான் ரயிலில் கடத்தப்பட்ட 155 பேர் மீட்பு; பயங்கரவாதிகள் 27 பேர் சுட்டுக்கொலை

பெஷாவர்: பாகிஸ்தானில் ரயிலில் கடத்தப்பட்டவர்களில் 155 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 27 பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
உடனடியாக, பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ரயிலை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உயிரிழந்தார். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பின், சிலரை விடுவித்துவிட்டு, 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.
அவர்களை மீட்கும் பணியில் பாக்., ராணுவம் ஈடுபட்டுள்ளது. ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 30 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மோதலுக்கு இடையே பெண்கள் 31 பேர், குழந்தைகள் 15 பேர் உட்பட 155 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வாசகர் கருத்து (6)
ram - mayiladuthurai,இந்தியா
12 மார்,2025 - 12:48 Report Abuse

0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
12 மார்,2025 - 12:36 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 மார்,2025 - 12:01 Report Abuse

0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
12 மார்,2025 - 11:39 Report Abuse

0
0
Reply
சண்முகம் - ,
12 மார்,2025 - 10:33 Report Abuse

0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
12 மார்,2025 - 10:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
-
ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி
-
ஆட்டோ டிரைவரான டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்: பெங்களூருக்காரருக்கு ஏற்பட்ட சோகம்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement