சுப்மனுக்கு மீண்டும் கவுரவம் * மூன்றாவது முறையாக விருது

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதை மூன்றாவது முறையாக வென்றார் சுப்மன் கில்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்மித், நியூசிலாந்தின் பிலிப்ஸ் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
தற்போது பிப்ரவரி மாதத்தில் 5 போட்டியில் 406 ரன் விளாசி இருந்த சுப்மன் கில் (சராசரி 101.50 ரன்), சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசி இருந்தார். முன்னதாக, கடந்த 2023 ல் (ஜனவரி, செப்டம்பர்) இரு முறை இவ்விருது பெற்றிருந்தார்.
தற்போது மூன்றாவது முறை சிறந்த வீரர் ஆன முதல் இந்தியர் என பெருமை பெற்றார். சர்வதேச அரங்கில் அதிக முறை விருது வென்ற பாபர் ஆசமுடன் (3, பாக்.,) இணைந்தார். சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் அலானா கிங், முதன் முறையாக தேர்வானார்.