நெல் மூடைகளுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி

செஞ்சி:செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மண் சரிவு ஏற்பட்டு கிணற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகள், செஞ்சி மார்க்கெட் கமிட்டி குடோனில் சேமித்து வைக்கின்றனர். அதன்படி, 10க்கும் மேற்பட்ட லாரிகளில் நெல் மூட்டைகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்தனர்.நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு மூட்டை இறக்கும் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட கூலி பிரச்னையால் நெல் மூட்டைகளை இறக்காமல் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் ஒரு வாரமாக நிறுத்தி இருந்தனர். நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டு ஒரு பகுதி லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கினர். மீதம் இருந்த லாரிகளை மார்க்கெட் கமிட்டியில் நிறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், 40 கிலோ எடை கொண்ட 600 நெல் மூட்டைகளுடன் மார்கெட் கமிட்டியில் உள்ள கிணற்று அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி, நேற்று காலை 8:30 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டு சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கிணற்றில் கவிழ்ந்தது. இதில் பாதியளவு நெல் மூட்டைகள் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்தது.
நேற்று மாலை கிரேன் உதவியுடன் லாரியை கிணற்றில் இருந்து மீட்டனர். லாரி கவிழ்த்த போது கிணற்றையொட்டி இருந்த மின் கம்பமும் உடைந்து விழுந்தது. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
இதில், 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதமானது.
மேலும்
-
தமிழகத்தில் நேற்று அதிக மழைப்பொழிவு எங்கே!
-
நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்
-
பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது
-
எங்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் தேவை; கல்லுாரி மாணவர்கள் 'பளிச்'
-
மத்திய அமைச்சர் மீது அவதூறு: மின்னல் வேகத்தில் செயல்பட்டது போலீஸ்!
-
திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு: நடிகை ரூபிணியிடம் மோசடி செய்த பி.ஆர்.ஓ.,