காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்ஸ்சன் ஜோடி, பிரிட்டனின் ஹென்றி பேட்டன், பின்லாந்தின் ஹெலியோவாரா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது.
அடுத்த செட்டை 5-7 என போராடி இழந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டைபிரேக்கர்' நடந்தது. இதை பாம்ப்ரி ஜோடி 10-5 என கைப்பற்றியது.
ஒரு மணி நேரம், 29 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-2, 5-7, 10-5 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement