சென்னை - துாத்துக்குடிக்கு சேவை மார்ச்.,30ல் 'ஸ்பைஸ்ஜெட்' துவக்கம்
சென்னை, சென்னை - துாத்துக்குடி இடையேயோன விமான சேவையை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், மார்ச் 30ல் துவங்க உள்ளது.
துாத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனைய பணி நடந்து வருகிறது. இவை செயல்பாட்டிற்கு வந்தவுடன், அதிக பயணியர் கையாளும் திறன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோடை கால அட்டவைப்படி ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், சென்னை - துாத்துக்குடி இடையிலான தினசரி விமான சேவையை, மார்ச் 30ல் துவங்க உள்ளது.
சென்னையில் இருந்து காலை 6:00 மணி, மதியம் 2:20 மணிக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை, spicejet.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
★★★
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement