டிரிம்மர் மிஷின் ஆர்டர்; கூரியரில் வந்த ஜல்லி கற்கள்

குன்னுார்; குன்னுாரில் 'ஆன்லைனில்' டிரிம்மர் மிஷின் வாங்க ஆர்டர் செய்தவருக்கு, ஜல்லி கற்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மேல் கடை வீதி பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைனில், டிரிம்மர் மிஷின் வாங்க ஆர்டர் செய்துள்ளார். கூரியரில் டெலிவரி செய்த போது, எடையளவில் சந்தேகமடைந்த அவர் பார்சலை பிரித்துள்ளார்.
அதில், பார்சலுக்குள் வெறும் ஜல்லி கற்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பிரிக்கும் போது வீட்டில் இருந்தவர்கள் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
கூரியர் நிறுவன ஊழியர்கள் கூறுகையில்,'சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்களில் நேரடியாக ஆர்டர் செய்யாமல், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூலம் வரும் லிங்குகளை கிளிக் செய்து ஆர்டர் செய்வதால் இதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரடியாக சம்பந்தப்பட்ட தனியார் ஆன்லைன் நிறுவனங்களின் 'ஆப்' களின் மூலம் பதிவு செய்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாது,' என்றனர்.

மேலும்
-
யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி
-
நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
-
விடுதி உணவில் பிளேடு, புழு.. உஸ்மானிய பல்கலை மாணவர்கள் போராட்டம்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது