டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

புதுடில்லி: டில்லியில் பிரிட்டன் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, டில்லியைச் சேர்ந்த ஒரு நபருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபரை சந்திப்பதற்காக, தலைநகர் டில்லிக்கு விமானம் மூலம் வந்துள்ளார்.
தென்கிழக்கு டில்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தின் அருகே உள்ள மஹிபல்பூரில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அந்த அறையில் அந்த நபருடன் தங்கியிருக்கும் போது, பிரிட்டன் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு செல்லும் போது, ஓட்டலின் லிப்டில் வைத்து மற்றொரு நபரால் பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.










மேலும்
-
வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள்; இது மைல்கல் என இஸ்ரோ பெருமிதம்
-
வீரவசனம் பேசினால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது; இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க; செய்தியாளர்களிடம் கேட்கிறார் ராமதாஸ்
-
தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்
-
மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்
-
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி