தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; ஒடிசா கடற்கரையில் சோதனை வெற்றி

5

சண்டிபூர்: ஒடிசா கடற்கரையில் தேஜஸ் போர் விமான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.



கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது.

இந்தப் போர் விமானங்களின் மூலம் ஆஸ்ட்ரா ஏவுகணையை செலுத்தி, வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனை ஒடிசா மாநிலம் சண்டிபூர் கடற்கரையில் நிகழ்த்தப்பட்டது.

எதிர்பார்த்தபடியே, ஆஸ்ட்ரா ஏவுகணை வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையானது, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ., தொலைவுக்கு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சோதனை வெற்றி முக்கிய மைல்கல் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement