இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!

1

சென்னை; பட்ஜெட் தாக்கலுக்கு முன், எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., அறையில் நடைபெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.



தமிழக அரசின் பட்ஜெட் இன்று (மார்ச் 14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


சட்டசபை நிகழ்வுகள் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., சட்டசபை வளாகத்துக்கு வந்தார். பின்னர் தமது அறையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார்.


கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இதில் எம்.எல்.ஏ.,வும், கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் மாஜி அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

Advertisement