சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது

3


சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


நடிகர் விஜய் த.வெ.க., என்ற கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி வந்தது.


இந்நிலையில், த.வெ.க., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: த.வெ.க., பொதுக்குழு கூட்டமானது மார்ச் 28 காலை 9 மணிக்கு சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள அனைவருக்கும் அழைப்புக் கடிதம் இமெயில், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement