மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்; மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது

மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிங்கார் மனைவி ரவணம்.80. இவரது மகள் வழி பேத்தியான புனிதா என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் காத்தான் மகன் காமராஜ்.38. என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக புனிதா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து பலமுறை புனிதாவை வீட்டிற்கு அழைத்தும் வராததால் ஆத்திரமடைந்த காமராஜ் நேற்று மாலை வீட்டிலிருந்த புனிதாவின் தாயார் நாகவல்லி பாட்டி ரவணம் ஆகியோரிடம் புனிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காமராஜ் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த ரவணம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் மூதாட்டியின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது சம்பவம் குறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிந்து காமராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
அமெரிக்காவில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் பலி
-
பாகிஸ்தானுக்கு உளவு: உ.பி.,யில் ஆயுதப்படை தொழிற்சாலை ஊழியர் கைது
-
கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி
-
பாதுகாப்பு படையினருடன் மோதல்: ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பலி
-
பொற்கோவில் பக்தர்கள் மீது தாக்குதல்: 5 பேர் காயம்
-
பங்குனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோவில்!