பங்குனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோவில்!

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.



தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து பூஜை மேற்கொள்கிறார். நாளை (மார்ச் 15) முதல் மார்ச் 19ம் தேதி வரை நாள்தோறும் வழிபாடுகள் நடைபெறுகிறது.


மார்ச் 19ம் தேதி இரவு அத்தாழ பூஜை முடிந்த பின்னர், அரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.


இம்முறை 18ம் படி ஏறிய பின் சாமியை தரிசனம் செய்ய சோதனை அடிப்படையில் புதிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. 18ம் படி வழியாக சந்திதானம் வந்த பிறகு, மேம்பாலம் வழியாக இல்லாமல் கொடிமரத்தில் இருந்து நேரிடையாக கோவில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக செல்லலாம்.


இந்த நடைமுறை மூலமாக இம்முறை பக்தர்களுக்கு கூடுதல் நேரம் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement