வாடிப்பட்டியில் ஆக்கிரமிப்பு

வாடிப்பட்டி; வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி துவக்கப்பள்ளி ரோட்டில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் மீது ஆக்கிரமித்து 'செட்'கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் வடிகாலை சுத்தம் செய்ய முடியாமல் சுகாதாரம் பாதித்துள்ளது. வடிகால் வழியாக ஓட்டல், வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது.

மழைநேரங்களில் கழிவுகள் ரோட்டில் ஓடுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

ஐம்பது மீட்டருக்கும் மேலாக வடிகாலை ஆக்கிரமித்து படிக்கட்டுகள், சிலாப்புகள், கடைகள் 'செட்'கள் அமைத்துள்ளனர். எனவே துாய்மை பணியாளர்களால் துார்வார முடியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement