ஏப்ரலில் ஓட்டத்திற்கு டிராக் தயார்

மதுரை; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.8.24 கோடியில் செயற்கை தடகள டிராக் அமைப்பதில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 3வது அடுக்கு ரப்பர் துகள்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது.

400 மீட்டர் தடகள டிராக்கில் இரண்டடுக்குகளாக கருப்புநிற ரப்பர் துகள்கள் பூசப்பட்டு காயவிடப்பட்டுள்ளது.

டிராக்கின் உட்பகுதியில் கால்பந்து அரங்கிற்காக இயற்கை புல் நடுவதற்காக மண் தயார்படுத்தப்பட்டுள்ளது. டிராக்கில் 3 வது அடுக்கு ரப்பர் துகள்கள் பூச்சு முடிந்ததும் உள்ளே இயற்கை புற்கள் நாற்றுகளாக நடவு செய்யப்படும். 2024 மார்ச்சில் துவங்கிய பணியில் 90 சதவீதம் முடிந்துள்ளது. ஏப். 15க்கு மேல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திடம் டிராக் ஒப்படைக்கப்படும். அதன் பின் முதற்கட்டமாக தடகள சங்கங்கள் சார்பில் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement