கம்பமெட்டு மலைப் பாதையில் உலா வரும் மிளா மான்கள்
கம்பம்; கம்பத்திலிருந்து கேரளா செல்லும் கம்பமெட்டு மலைப் பாதையில் மிளா மான்கள் உலா வருவதால் வாகனங்களில் செல்வோர் மகிழ்ச்சியில் செல்கின்றனர்.
மேகமலை வனப்பகுதிகள் புலிகள் காப்பகமாக மாறிய பின்பு வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
குறிப்பாக மான்கள், காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
மேகமலை பகுதியில் உள்ள வன உயிரினங்கள் சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி குள்ளப்பகவுண்டன்பட்டி, எரசை, காமயகவுண்டன்பட்டி கன்னிசேர்வை பட்டி உள்ளிட்ட மலையோர கிராமங்களின் தோட்டங்களில் உலா வருகிறது.
ரோட்டிற்கு - மேற்கு பக்கம் உள்ள காப்பு காடுகளில் உள்ள மான்கள் இரை தேடி கம்பமெட்டு மலைப் பாதைக்கு வந்து விடுகிறது.
சில மான்கள் கடந்த காலங்களில் வாகனங்கள் மோதி பலியாகி உள்ளது.
இரவில் மட்டுமே உலா வந்த மான்கள் சில நாட்களாக பகலிலும் உலா வருகிறது.
வாகனங்களில் செல்வோர் மிளா மான்களை பார்த்து போட்டோ எடுத்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள் வன உயிரினங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தாத வண்ணம் செல்ல வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி