மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி துவக்க விழா நடந்தது.
பனையபுரம் துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் காந்தரூபீ வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் காமாட்சி சிவராமன் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளைத் தலைவர் வடிவேல் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பா.ம.க., மாநில துணைத் தலைவர் அன்புமணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கைத்தறி, தையல் தொழிற் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். மின்வாரிய வணிக ஆய்வாளர் நாகப்பன் கைத்தறி மெஷினை திறந்து வைத்தார்.
விழாவில் கிராம பிரமுகர் சிவப்பிரகாசம், சிறப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன், மனிதம் காப்போம் குழு சந்துரு குமார், உதவும் கரங்கள் புஷ்பராஜ், மல்லர் கம்ப பயிற்சியாளர் சஞ்சய், நித்யஸ்ரீ, ஜெயபிரதா, மாற்றுத்திறன் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பள்ளி முதல்வர் தனலட்சுமி வடிவேல் நன்றி கூறினார்.
மேலும்
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ
-
ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தும் தமிழக அரசு; போராட துாண்டுகிறதா என சங்கங்கள் கேள்வி