இன்ஸ்., சப் இன்ஸ்.,களுக்கு பணிக்கால வரன்முறை ஏற்படுத்த நடவடிக்கை தேவை
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் ஒரு காவல் நிலையத்தில் புதியதாக பொறுப்பேற்கும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகாலம் தொடர்ந்து பணியாற்றிட கால வரன்முறை உள்ளது.
பொறுப்பேற்கும் நிலைய அதிகாரிகள் அந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள், குற்றவாளிகள், குற்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் இடம் மற்றும் பதற்றமான இடங்களைக் கண்டறிய குறைந்த பட்சம் 6 மாதகாலம் ஆகும். ஆனால், பணி பொறுப்பேற்கின்ற அதிகாரிகள் ஒரு காவல் நிலையத்தில் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு கூட பணி செய்ய முடியாமல் பணி மாறுதல் பெற்றும், மாவட்ட அலுவலகத்தின் நடவடிக்கையிலும் பணி மாறுதலாகி செல்கின்றனர்.
இதனால் பல காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற காவல் நிலையங்களில் அருகில் காவல் நிலைய அதிகாரிகள் பணி பொறுப்பேற்று செயல்படவேண்டிய நிலை உள்ளது. ஆனால், அவர்களால் இரு காவல் நிலையங்களையும் முழுமையாக கவனிக்க முடியாமல் பணி பாதிக்கிறது.
கான்ஸ்டபிள், ஏட்டு ஆகியோர் தொடர்ந்து 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்வதால் சரக எல்லையில் அனைத்து இடங்களையும் அத்துபடியாக தங்கள் விரல் நுனியில் விபரங்களை வைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளில் குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கிறதே தவிர அதை யாரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முடிவதில்லை.
அதே போன்று நேரடியாக பதவி பெற்று பணிக்கு வரும் சப் இன்ஸ்பெக்டர்கள், அடி மட்ட பொறுப்பிலிருந்து பதவி உயர்வு பெறும் சப் இன்ஸ்பெக்டர்களிடையே நிலவும் ஈகோ பிரச்னைகளால் வழக்குகள் குவிந்து அனைவருக்கும் பணிச்சுமை அதிகரிக்கிறது.
எனவே, இனி வரும் காலங்களில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பணி புரியும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணிக்கால வரன்முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ
-
ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தும் தமிழக அரசு; போராட துாண்டுகிறதா என சங்கங்கள் கேள்வி