அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

விழுப்புரம்: கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.
மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் கோபி (எ) வேல்முருகன், பாசறை இணைச் செயலாளர் ஜியாவுதீன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசுகையில், 'வரும் 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைவது நிச்சயம். அந்தளவு பொதுமக்கள் இந்த ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியிலும், கோவத்திலும் உள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வர நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், கிளைச் செயலாளர்கள் சரவணன், ஏழுமலை, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் கமால்தீன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் தமிழ் கருணாகரன், விவசாய அணி தலைவர் பார்த்திபன்.
மாணவரணி துணைச் செயலாளர் குமரவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் தங்க பாண்டியன், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன்.
மாவட்ட பிரதிநிதி ராஜ், ஜெ., பேரவை துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார், வி.அரியலுார் ஊராட்சி தலைவர் பழனி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ
-
ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தும் தமிழக அரசு; போராட துாண்டுகிறதா என சங்கங்கள் கேள்வி