போலீஸ் டைரி
சிறுமியிடம் அத்துமீறல்: 2 பேர் கைது
தாராபுரத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி. இவரிடம், ஊட்டியை சேர்ந்த அன்புராஜ், 20 என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். சிறுமியிடம் திருமணம் ஆசை வார்த்தை கூறி, அன்புராஜ், தனது நண்பர் இர்பான், 23 என்பவருடன் அழைத்து சென்றது தெரிந்தது. பெற்றோர் புகாரின் பேரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். சிறுமியை மீட்டு, இருவரையும் 'போக்சோ'வில் கைது செய்தனர்.
மது விற்றவர் கைது
திருப்பூர், கே.வி.ஆர்., நகரில் 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதாக இன்ஸ்பெக்டர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் பார் ஊழியர் தனசேகர், 28 என்பவரை கைது செய்து, 26 மதுபாட்டில், 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர் சரவணன், 37 என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
கஞ்சா விற்றவர் கைது
மங்கலம், வேட்டுவபாளையத்தில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர். அதில், கருமத்தம்பட்டியில் தங்கி நுால் மில்லில் வேலை செய்து வரும் ஒடிசாவை சேர்ந்த சுனில் மாலிக், 31 என்பது தெரிந்தது. கஞ்சா பொட்டலம் விற்பனை செய் வது தெரிந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாய்க்காலில் ஆண் சடலம்
பொங்கலுார், பி.ஏ.பி., வாய்க்காலில்என்.என்., புதுார் அருகே பழைய இரும்பு பாலம் உள்ளது. அதனருகே ஒரு ஆண் பிரேதம் மிதந்து வந்தது. இதுகுறித்து அறிந்த பொங்கலுார் கிராம நிர்வாக அலுவலர் அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார்பிரேதத்தை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ
-
ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தும் தமிழக அரசு; போராட துாண்டுகிறதா என சங்கங்கள் கேள்வி