நடுரோட்டில் பெண்ணுக்கு மிரட்டல் தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
அனுப்பர்பாளையம் : ரோட்டோரம் பழக்கடை வைத்திருந்த பெண்ணை ஆபாசமாக திட்டி, மிரட்டிய ஊராட்சி முன்னாள் துணை தலைவரான தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, கன்னிமார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சிவகாமி, 39. பெருமாநல்லுார் நால் ரோடு பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த, 16ம் தேதி பழக்கடைக்கு வந்த பெருமாநல்லுார் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் வேலுசாமி (தி.மு.க.,), கடை முன் வைத்திருந்த டேபிளை எடுக்கும்படி ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். இது குறித்து தட்டிக்கேட்ட அவரின் கணவர் குமாரையும் ஆபாசமாக திட்டினார்.
இது குறித்து, சிவகாமி, பெருமாநல்லுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சாதி பெயரை சொல்லி திட்டியதால், பி.சி.ஆர்., பிரிவின் கீழ் வேலுசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு குறித்து, அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் விசாரணை நடத்த, திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ
-
ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தும் தமிழக அரசு; போராட துாண்டுகிறதா என சங்கங்கள் கேள்வி