விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்: சென்னை ஐகோர்ட்

1

சென்னை: விக்கிரவாண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா வெற்றி செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.



கடந்தாண்டு ஜூலை மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிட்டார். அவர், 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று கூறி தேசிய மக்கள் கட்சியின் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தமது வேட்புமனு முறையாக பரிசீலிக்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும், அன்னியூர் சிவாவின் வெற்றியை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இந்த மனுவை நிராகரிக்க கோரி அன்னியூர் சிவா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில், அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லும் என்று தெரிவித்துள்ளது.


தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ தகவல்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவில் எவ்வித தவறும் நடக்கவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement