பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்

3

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., உத்தரவிட்டார்.



திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. விவசாயி. இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோருடன், கடந்த, நவ., 28ம் தேதி இரவு தெய்வசிகாமணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க டி.ஐ.ஜி., - எஸ்.பி., கண்காணிப்பில், 14 தனிப்படை மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்ய, 12 எஸ்.ஐ., கள் நியமிக்கப்பட்டனர். 5கொலையாளிகளை போலீசார் கண்டறிய இயலவில்லை.


கொலை நடந்த தினத்தில் இருந்து தற்போது வரை, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தோட்டத்தில் வேலை செய்தவர்கள், பழைய தொழிலாளர்கள், அவர்களுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தவர்கள் என, நுாறுக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்தனர். சந்தேகப்படும் நபர்கள் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இன்று (மார்ச் 18) இந்த வழக்கை சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றி டி.ஜி.பி., உத்தரவிட்டார்.
நவம்பர் 28ம் தேதி 3 பேர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு 110 நாட்களை கடந்துள்ளது. 110 நாட்களாக விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement