திருநெல்வேலியில் சோகம்! மின்சாரம் தாக்கி இருவர் பலி

1

திருநெல்வேலி: கொக்கிரகுளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கஜேந்திரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். அவரது மகன் சஞ்சய் தண்ணீர் நனைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற அருகில் நின்று கொண்டிருந்த ரவி முயற்சி செய்தார்.

ஆனால், சஞ்சய் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற ரவி என்பவரும், அதே இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement