காஷ்மீரில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு: பாகிஸ்தானை கடுமையாக சாடிய ஜெய்சங்கர்!

1

புதுடில்லி: 'காஷ்மீரில் மிக நீண்ட காலமாக சட்ட விரோதமாக மற்றொரு நாடு ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது' என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த தனியார் மாநாட்டில், மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் சில மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: நாம் அனைவரும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறோம்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், காஷ்மீரில் மிக நீண்ட காலமாக சட்ட விரோதமாக மற்றொரு நாடு ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. நாங்கள் ஐ.நா.,விற்கு சென்றோம். தாக்குதல் நடத்திய வரும், பாதிக்கப்பட்டவரும் சமமாக நிறுத்தப்பட்டனர். படையெடுப்பு சர்ச்சையாக மாற்றப்பட்டது.



குற்றவாளிகள் யார்? நமக்கு ஒரு ஒழுங்கு தேவை என்றால், நியாயம் இருக்க வேண்டும். உள்நாட்டின் ஒழுங்கின் போல, சர்வதேச ஒழுங்கும் தேவை. ஒழுங்கின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா., நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இன்று நாம் அரசியல் தலையீடு பற்றிப் பேசுகிறோம். பாகிஸ்தான் போன்ற சிறிய நாடுகள் கூட ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement