கடைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச் 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில், சட்டசபையின் இன்றைய (மார்ச் 18) நாள் நிகழ்வின் போது புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது;
புதுச்சேரிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும்.
இதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அரசின் விழா அழைப்பிதழ்களிலும் தமிழ் இடம் பெற்று இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்
-
100 நாள் வேலைத்திட்ட சம்பளம்: அதிகரிக்க சோனியா வலியுறுத்தல்
-
பிரதமருடன் சந்திப்பு மறக்கமுடியாதது: இளையராஜா நெகிழ்ச்சி
-
பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்
-
நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் கேட்கிறார் ராமதாஸ்