வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் சர்ச்சை பேச்சு; அண்ணாமலை வீடியோ வெளியீடு

சென்னை: ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் என் வீட்டில் மாடு மேய்க்கிறான் என தி.மு.க., அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சை பேச்சின் வீடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சையாக பேசிய வீடியோவை அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தா.மோ.அன்பரசன், 'ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறான்.. எங்கு இருக்கிறான். ஹிந்தி படிச்சவன் எல்லாம் என் வீட்டில் மாடு மேய்க்கிறான்.
11ம் வகுப்பு தேர்ச்சி
தி.மு.க., அமைச்சர் அன்பரசன் 11ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், மிகவும் மோசமான தமிழ் புலமை கொண்டவர், மேலும் தமிழக அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சராக உள்ளார். தேசிய கல்விக் கொள்கை, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முந்தைய கல்விக் கொள்கைகளைப் போல அல்ல.
3ம் மொழி
அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பது பற்றியது, தாய்மொழி (தமிழ்) கற்பித்தல் மொழியாக வலியுறுத்துவது மற்றும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் மொழியை கற்பிக்க வழிவகுக்கிறது. தமிழக மக்கள் இதை உணர்ந்துள்ளனர், மேலும் தி.மு.க., வெறுப்பு பிரசாரம் செய்து நேரத்தை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.










மேலும்
-
சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்
-
100 நாள் வேலைத்திட்ட சம்பளம்: அதிகரிக்க சோனியா வலியுறுத்தல்
-
இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
-
பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்
-
நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் கேட்கிறார் ராமதாஸ்